0
Shopping Cart(0)

About Us

எமது ரெட்டியார்சத்திரம்  வளங்குன்றா வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனமானது ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் கடந்த 2010ம்  ஆண்டு கன்னிவாடி பகுதியை சார்ந்த சிறு குறு விவசாயிகள் முன்னேற்றத்திற்க்காக உருவாக்கப்பட்டது. இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் 1150 விவசாயிகள்   பங்குதாரர்களாக இணைந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான இயற்கை இடுபொருட்களை மதுரம் என்ற பிராண்டின் கீழ் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.  இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம். மேலும், இப்பகுதியில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டுதலின் ஒரு பகுதியாக பாரம்பரிய முறைப்படி செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகள் விளைவிக்கும் மக்காசோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

காமன் வெல்த் ஆப் லேர்னிங் (கோல்), கனடா நிறுவனத்துடன் இணைத்து  சிறு குறு விவசாயிகளின் திறனை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வி மற்றும் மொபிமூக் கல்வி திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். எங்கள் நிறுவனம் சார்ந்த தகவல்களை எங்களது வலைதளம், facebook, யூடுப்  சேனல் மற்றும் வாட்டஸ் ஆப் குழுக்கள் வாயிலாகவும் கீழ்கண்ட தொலைபேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் - 6381066143. எங்கள் நிறுவன முகவரி :    Door No 25, ரெட்டியார்சத்திரம்  வளங்குன்றா வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம், கிட்டம்பட்டி கிராமம், கசவனம்பட்டி போஸ்ட், கன்னிவாடி வழி, திண்டுக்கல் மாவட்டம். தமிழ்நாடு மாநிலம்.

Vision

கன்னிவாடி பகுதியில் உள்ள சுமார் 30000 சிறு குறு பெண் மற்றும் ஆண் விவசாயிகளின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

Mission

கன்னிவாடி பகுதியில் உள்ள சிறு குறு பெண் மற்றும் ஆண் விவசாயிகளுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் புதிய தொழிநுட்பங்கள் வாயிலாக விவசாயிகளின் உற்பத்தி மேம்பாடு அடையச்செய்தல் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து இணைத்தல்.

 

All Departments